Home செய்திகள்உலக செய்திகள் தென்காசி மாவட்டத்தில் 11 புதிய அரசு பேருந்துகள்; போக்குவரத்துத் துறை அமைச்சர் துவக்கி வைத்தார்.

தென்காசி மாவட்டத்தில் 11 புதிய அரசு பேருந்துகள்; போக்குவரத்துத் துறை அமைச்சர் துவக்கி வைத்தார்.

by Abubakker Sithik

தென்காசி மாவட்டத்தில் 11 புதிய அரசு பேருந்துகள்; போக்கு வரத்துத் துறை அமைச்சர் துவக்கி வைத்தார்.

தென்காசி மாவட்டத்தில் 11 புதிய பேருந்துகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் துவக்கி வைத்தார். தென்காசி திருவள்ளுவர் பேருந்து நிலையத்தில் 05.03.2024 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் முன்னிலையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் 11 புதிய பேருந்துகளை புதிய வழித்தடங்களில் துவக்கி வைத்து பணியாற்றிய ஓட்டுநர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

விபத்தின்றி நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்ததாவது, அமைச்சர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3000 புதிய பேருந்துகளை வாங்க அனுமதி வழங்கியுள்ள நிலையில், முதற்கட்டமாக, 100 பேருந்துகளை தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் கொடியசைத்து துவக்கி வைத்தார். சட்டமன்ற கூட்டத் தொடரில் நிதிநிலை அறிக்கையில் 2000 புதிய பேருந்துகள் வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 309 பேருந்துகள் திருநெல்வேலி போக்குவரத்துக் கழகத்திற்கு வழங்கப்பட உள்ளது. முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட மகளிர், மாற்றுத் திறனாளிகள், உதவியாளர் மற்றும் திருநங்கைகள் ஆகியோர் தமிழ்நாடு முழுவதும் சாதாரண கட்டண நகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் விடியல் பயண திட்டம் 08.05.2021 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் நாளொன்றுக்கு சராசரியாக 5.65,760 மகளிரும், 3,342 மாற்றுத் திறனாளிகள், மாற்றுத் திறனாளிகளின் உதவியாளர்கள் மற்றும் 285 திருநங்கைகள் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டம் ஆரம்பிக்கும் போது தமிழ் நாட்டிலுள்ள மாவட்டங்களிலேயே மிக அதிக அளவாக 70 % மகளிர் பயணம் செய்தனர். தற்போது 80% அளவில் மகளிர் பயணம் செய்து வருகின்றனர். மேலும், மற்ற சகோதர போக்குவரத்து கழகங்களை காட்டிலும் இப்போக்குவரத்துக் கழகத்தில் மகளிர் அதிக அளவு பயணம் செய்து வருகின்றனர். இதற்கு அரசு மானியமாக திருநெல்வேலி போக்குவரத்து கழகத்திற்கு மாதம் ஒன்றிற்கு சுமார் 27.00 கோடி ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

சாலை விபத்துக்களை தடுக்கும் வகையில் விபத்தின்றி 25 வருடங்கள் பணியாற்றிய 2 ஓட்டுநர்களுக்கு தலா 4 கிராம் தங்க நாணயங்கள் மற்றும் 10 வருடங்கள் விபத்தின்றி பணியாற்றிய 43 ஓட்டுநர்களுக்கு தலா 100 கிராம் வெள்ளி நாணயங்களும் வழங்கப்பட்டுள்ளது. இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் அரசு நிதியுதவி ரூ.1 இலட்சத்திலிருந்து ரூ.2 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. பொது மக்கள் சாலை விதிகளை பின்பற்றி விபத்துகளைக் குறைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தார்..

தொடர்ந்து, தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வலுவலகத்தின் மூலம் பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியிலேயே வாகனம் ஓட்டுநர் உரிமத்தினை எளிதாக பெற்றுக் கொள்ள முடியும். வரும் காலங்களில், இப்பகுதியில் உள்ள பொதுமக்களின் வசதிக்கேற்ப சொந்த கட்டடம் அமைக்கப்படும். அதற்கான நடவடிக்கை தற்போது எடுக்கப்பட்டு வருகிறது என பேசினார்.

இவ்விழாவில், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பழனிநாடார் (தென்காசி), ஈ.ராஜா (சங்கரன்கோவில்), பி.எச்.மனோஜ் பாண்டியன் (ஆலங்குளம்), மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் உதயகிருஷ்ணன், நகர்மன்ற தலைவர்கள் ஆர்.சாதிர் (தென்காசி), ஹபிபுர் ரகுமான் (கடையநல்லூர்), தென்காசி நகர்மன்ற துணைத்தலைவர் கே.எல்.என்.சுப்பையா, தென்காசி ஒன்றியக்குழு தலைவர் ஷேக் அப்துல்லா, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் காவேரி சீனித்துரை (கீழப்பாவூர்), திவ்யா மணிகண்டன் (ஆலங்குளம்), தென்காசி ஒன்றியக்குழு துணைத் தலைவர் கனகராஜ் முத்துப்பாண்டியன்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் கு. இளங்கோவன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் தி.வே.சரவணன், துணை மேலாளர் (வணிகம்) சுப்பிரமணியம், துணைப் போக்கு வரத்து ஆணையர் (திருநெல்வேலி) நா.ரவிச்சந்திரன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (தென்காசி) எஸ்.கண்ணன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ராஜன், மணிபாரதி, கனகவள்ளி, அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி), செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவாஸ்கான், தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!