இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
பகுதி -3
கப்ளிசேட்
உஸ்மானிய பேரரசு -6
(கி.பி 1299-1922)
உஸ்மான் அவர்களின் மூத்த மகன் அலாவுதீன் மிகுந்த இறைபக்தி உடையவராக இருந்தார்.
சூஃபி ஞானமும் தனிமையில் தவம் இருத்தல் எனவும் அரசின் பொறுப்புகள் மீது ஆர்வம் இல்லாதவராக இருந்தார்.
ஆகவே அவர் இளவரசர் பொறுப்பை ஏற்காமல் தனது தம்பி உர்கானை இளவரசராக அறிவிக்க செய்தார்.
பதவிக்கு கொலைகள் நடக்கும் அரசியல் மரபில் இதுவொரு விநோதமான நிகழ்வாகும்.
உர்கான் பதவியேற்றதும் தனது அண்ணனை தலைமை அமைச்சராக வற்புறுத்தி நியமித்தார்.
தான் போருக்கு வெளியில் சென்று விட்டால் ஆட்சியாளராகவும் செயல்படும் புதிய பதவி ஒன்றை உருவாக்கி அலாவுதீன் அவர்களை நிர்வாகங்களில் ஈடுபடத் செய்தார்.
அலாவுதீன் தலைமை அமைச்சராக செயல்பட்டு ஏராளமான சீர்திருத்தங்களை செய்தார்.
செல்ஜூக்கியர் களின் நாணயங்களை தடை செய்துவிட்டு உஸ்மானிய நாணயங்களை புழங்க செய்தார். இது பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கி வெற்றிகளை பெற்றது.
மக்களிடையே பணப்புழக்கங்கள் அதிகரித்தது. தனித்தனி துறைகளுக்கு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர்.
அவர்களுக்கு கீழ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இதனால் நிர்வாகம் சீராகவும், துல்லியமாகவும் நடைபெற்றது. உர்கான் காலத்தில் உஸ்மானிய அரசு பேரரசாக விரிந்தது.
உஸ்மானியர்கள் வெற்றி பெற்ற பகுதிகளில் எல்லா மதத்தினர்களும் சமமாக நடத்தப்பட்டனர்.
வேறு பிரதேசங்களுக்கு செல்ல விரும்புபவர்கள் தங்கள் பொருட்களோடு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
உஸ்மானிய ராணுவம் மிக வலுவாக கட்டமைக்கப்பட்டது
பல லட்சம் வீரர்கள் கொண்ட படையாக உஸ்மானிய ராணுவம் பலம் பெற்றது.
அதுவரை மன்னருக்கு சொந்தமாக மெய்க்காவல் படை இல்லாமல் இருந்தது.
ராணுவ வீரர்கள் மன்னருக்கு எதிராக திரும்பினால் நிலைமை சிக்கலாகுமே என யோசித்த உர்கானும், அமைச்சர் அலாவுதீனும் ஒரு ஆலோசனை செய்து,
கிறிஸ்தவ மதத்திலிருந்து முஸ்லீமாக மாறியவர்கள் வேறு போக்கிடம் இல்லாததால் விசுவாசமாக இருப்பார்கள் என ஆலோசிக்கப்பட்டது.
அப்படிப்பட்ட வீரர்களை தேர்ந்தெடுத்து மன்னரின் உள்வட்டப்படை சிறிதுசிறிதாக வலுவாக உருவாக்கப்பட்டது.
இந்த வீரர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. மன இயல் பயிற்சியாளர்கள் அளிப்பதற்கு சூஃபி ஞானி ஹாஜி பக்தாஸ் அவர்களிடம் அனுப்பப்பட்டனர்.
இந்த படைப்பிரிவுக்கு துருக்கிய மொழியில் “எனிச்சாரி” என பெயரிடப்பட்டது.
புதிய போர்களின்போது எனிச்சாரி படைகள் மின்னல் வேகத்தில் எதிரிப்படைகளை தாக்கி அழிக்கும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டது.
எனிச்சாரி பிரிவு படைகள் வந்தாலே வெற்றிதான் என்னும் நிலைமை உருவானது. “எனிச்சாரி” படைப்பிரிவில் ஐந்து லட்சம் வீரர்கள் இருந்தனர்.
எனிச்சாரி பிரிவு படைகள் எல்லைமீறி அட்டூழியங்கள் செய்ய ஆரம்பித்தனர்.
அதன் விளைவுகள் என்ன..?
வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!
You must be logged in to post a comment.