Home செய்திகள்உலக செய்திகள் முஸ்லீம் பெண்கள் உதவும் சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா..

முஸ்லீம் பெண்கள் உதவும் சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா..

by Abubakker Sithik

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் முஸ்லீம் பெண்கள் உதவும் சங்கத்தின் மூன்றாவது நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 131 பயனாளிகளுக்கு ரூ.11 இலட்சத்து 5 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் சா.பீட்டர் அல்போன்ஸ் வழங்கினார்.

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் 27.02.2024 அன்று நடைபெற்ற மாவட்ட முஸ்லீம் பெண்கள் உதவும் சங்கத்தின் மூன்றாவது நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் சா.பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 111 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களையும், 20 பயனாளிகளுக்கு கல்வி உதவித் தொகைகளும் என மொத்தம் 131 பயனாளிகளுக்கு ரூ.11 இலட்சத்து 5 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் சா.பீட்டர் அல்போன்ஸ் வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முருகானந்தம் வரவேற்புரையாற்றினார். முஸ்லீம் பெண்கள் உதவும் சங்க கௌரவ செயலாளர் மொ. முகம்மது ஸலீம் விளக்கவுரையாற்றினார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் ஆண்டணி ஃபெர்னான்டோ சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில், மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் சா.பீட்டர் அல்போன்ஸ் பேசியதாவது, டாக்டர் கலைஞர் இஸ்லாமிய பெண்களுக்கு உதவி செய்து பொருளாதார சுதந்திரம் வழங்க உருவாக்கிய திட்டம் முஸ்லீம் பெண்கள் உதவும் திட்டம். 10 ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த இத்திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் வலுவூட்டப்பட்டு, புத்துயிரூட்டப்பட்டு, பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் முஸ்லீம் பெண்கள் உதவும் சங்கத்தின் மூலம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இரண்டாவது சங்கமும் சில மாவட்டங்களில் தொடங்கப் பட்டுள்ளது. கிறிஸ்தவ மகளிருக்கும் இத்திட்டமானது செயல்படுத்தப் பட்டுள்ளது. அவர்களும் இத்திட்டத்தின் மூலம் பயனடைய ஊக்குவித்து வருகிறோம். சமுதாயத்திற்கு பெண்கள் முதுகெலும்பு போன்றவர்கள். பெண்கள் முன்னேறினால் தான் சமுதாயம் முன்னேறும். எல்லோருக்கும் வளர்ச்சி என்ற அடிப்படையில் மக்களுக்காக செயல்பட்டு வரும் திராவிட மாடல் ஆட்சியில் சமூக, பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கியுள்ள இஸ்லாமிய பெண்களை ஊக்குவித்து அவர்களுக்கு நிரந்தரமான தொழில், வருமானம் கிடைக்கும் வகையில் தொழில் வாய்ப்பு அளிக்கப்பட்டு நல்ல வருமானம் கிடைக்கும் வகையில் முஸ்லீம் பெண்கள் உதவும் சங்கம் செயல்பட்டு வருகிறது. சமூக சிந்தனையோடு சாதி மத வேறுபாடு இன்றி அனைவரும் ஏழைகள் நலனில் அக்கறை கொண்டு செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், மாநில சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவர் இறையன்பன் குத்தூஸ், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பழனிநாடார், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் தி. உதயகிருஷ்ணன், முஸ்லீம் பெண்கள் உதவும் சங்கம் கௌரவ இணைச் செயலாளர்கள் மரு.அப்துல் அஜீஸ், பக்கீர் மைதீன், நகர்மன்ற உறுப்பினர்கள் காதர் முகைதீன், சாகுல் ஹமீது, நாகூர் மீரான், செய்யது சுலைமான், மாவட்ட மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஷேக் அப்துல்காதர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. இளவரசி மற்றும் கௌரவ உறுப்பினர்கள், காப்புரிமை உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!