Home செய்திகள்உலக செய்திகள் தமிழகத்தில் மக்கள் போற்றுகின்ற ஆட்சியை தந்தவர் எம்ஜிஆர்; பிரதமர் மோடி புகழராம்..

தமிழகத்தில் மக்கள் போற்றுகின்ற ஆட்சியை தந்தவர் எம்ஜிஆர்; பிரதமர் மோடி புகழராம்..

by Abubakker Sithik

தமிழகத்தில் மக்கள் போற்றுகின்ற ஆட்சியை தந்தவர் எம்ஜிஆர்; பிரதமர் மோடி புகழராம்..

தமிழகத்தில் எம்ஜிஆர் தந்த நல்ல ஆட்சியை மக்கள் இன்னும் நினைத்துப் பார்க்கிறார்கள் பிரதமர் மோடி தமிழகத்தில் எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் நல்ல ஆட்சியை தந்தால் தான், இன்னும் மக்கள் அவர் நினைத்துப் பார்க்கிறார்கள் என பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பேசினார் .

மதுரை கருப்பாயூரணி டிவிஎஸ் மேல்நிலைப் பள்ளியில், குறுந் தொழிலதிபர்கள் டிஜிட்டல் மாநாட்டை, அவர் துவங்கி வைத்து பேசியதாவது, தமிழகத்தில் எம்ஜிஆர் சுயநலம் இல்லாமல் மக்களுக்கு தொண்டு செய்ததால், இன்று வரை அவரை மக்கள் வீடுகளில் படத்தை வைத்து தெய்வமாக நினைத்துப் பார்க்கிறார்கள். அவர் மக்கள் போற்றுகின்ற மகத்தான தலைவராக இன்னமும் திகழ்ந்து கொண்டிருக்கிறார் . அவருக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் அம்மையார் ஜெயலலிதா நல்லாட்சி தந்தார் என்பது எனக்கு நன்றாக தெரியும். ஆனால், தற்போது தமிழகத்தில் நடக்கும் திமுக ஆட்சி மக்கள் நலனை சிந்திக்காமல், செயல்படும் ஆட்சியாக திகழ்கிறது என அவர் குற்றம் சாட்டினார்.

இந்தியாவில் பாஜக ஆட்சி கடந்த 10 ஆண்டுகளில் தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, ஆகியவை மேம்பட்டு உள்ளது என்றும், மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை பாஜக அரசு தொடர்ந்து செய்து வருவதாகவும், லஞ்சம் ஊழலுக்கு எதிர்ப்பாக பாஜக ஆட்சி திகழ்ந்து கொண்டிருப்பதாகவும், பாஜகவை மக்கள் ஆதரித்தால், தொடர்ந்து நல்லாட்சி தர முடியும் என அவர் பேசினார். இதையடுத்து, பாரத பிரதமர் மோடி, வேட்டி சட்டையுடன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். அவரை, கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல் ராஜன் ,பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றார். அவர், மீனாட்சி சுந்தரேஸ் வரரை தரிசித்து விட்டு, பசுமலையில் உள்ள தாஜ் ஹோட்டலுக்கு புறப்பட்டு சென்றார்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வருகை ஒட்டி, மதுரையில் ஏழு அடுக்கு பாதுகாப்பு போடப் பட்டிருந்தது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சுற்றி 1000க்கும் மேற்பட்ட போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பிரதமர் மோடி, மதுரை மீனாட்சி அம்மன் வருவதையொட்டி, மாலை 5 மணி முதல் கோவில் வளாகத்தில் பக்தர்கள் யார் அனுமதிக்கப்படவில்லை. அவர் சுவாமி தரிசனம் முடிந்து சென்ற பிறகு, பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதித்தனர். பிரதமர் வருகை ஒட்டி ,மதுரையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. அவர், பிப்.28 அன்று தூத்துக்குடி, திருநெல்வேலி, மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

செய்தியாளர் வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!