Home செய்திகள் குலசேகரப்பட்டினம் இஸ்ரோ ஏவுதளத்தில் இருந்து முதன் முறையாக ஏவப்படும் ரோகிணி ராக்கெட்!- மீனவர்களுக்கும், பொதுமக்களுக்கு எச்சரிக்கை..

குலசேகரப்பட்டினம் இஸ்ரோ ஏவுதளத்தில் இருந்து முதன் முறையாக ஏவப்படும் ரோகிணி ராக்கெட்!- மீனவர்களுக்கும், பொதுமக்களுக்கு எச்சரிக்கை..

by Askar

குலசேகரப்பட்டினம் இஸ்ரோ ஏவுதளத்தில் இருந்து முதன் முறையாக ஏவப்படும் ரோகிணி ராக்கெட்!- மீனவர்களுக்கும், பொதுமக்களுக்கு எச்சரிக்கை..

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், குலசேகரன்பட்டணம் இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) ஏவுதள வளாகத்தில் இருந்து, உத்தேசமாக 28.02.2024 முதல் 29/02/2024 வரை காலை 09.30 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை) அட்சர தீர்க்க ரேகைகள் (Launch Pad 8 ° 22′ வடக்கு, தீர்க்கரேகை 78° 02′ கிழக்கு) ரோகிணி ராக்கெட் (Rohini Sounding Rocket (RH-200)) முதன் முறையாக ஏவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதால் இந்திய விண்வெளி ஆய்வு மையம் மூலம் (ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையம், SHAR) தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நேர்வில் மணப்பாடு கலங்கரை விளக்கத்திற்கும், பெரியதாழை தூண்டில் பாலத்திற்கும் கடற்கரையிலிருந்து 10 கடல் மைல் (18 கிலோ மீட்டர்) வரை கடலுக்குள் விரிந்து கிடக்கும் பகுதிகள் ஆபத்தான பகுதியாக இந்திய விண்வெளி ஆய்வு மையத்தினால் (இஸ்ரோ) அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, 28.02.2024 முதல் 29.02.2024 2 (காலை 09.30 மணி முதல் மாலை 02.00 மணி வரை மீனவர்கள் / பொதுமக்கள் சிறிய கப்பல்கள், மீன்பிடி படகுகள், மற்ற படகுகள், கட்டுமரம் வழியாக மேற்படி பகுதிக்குள் நுழைய வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com