Home செய்திகள் தென்காசி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் கலெக்டரை நேரில் சந்தித்து முக்கிய கோரிக்கை..

தென்காசி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் கலெக்டரை நேரில் சந்தித்து முக்கிய கோரிக்கை..

by Abubakker Sithik

தென்காசி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் கலெக்டரை நேரில் சந்தித்து முக்கிய கோரிக்கை..

தென்காசி மாவட்டம் புதிய உதயம் அனைத்து மாற்றுத்திறனாளிகள் சங்கம் மற்றும் டிசம்பர் 3 இயக்கத்தின் மாநில தலைவரும் தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளி நல வாரிய உறுப்பினருமான பேராசிரியர் தீபக் தலைமையில் தென்காசி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மாற்றுத் திறனாளிகளின் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தினர். மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட கலெக்டர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில், தென்காசி மாவட்டத்தில் இலவச வீட்டுமனை கொடுக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டுமனை அளந்து கொடுக்கப்பட வேண்டும், இலவச வீட்டு மனைக்கு மனு கொடுத்து இலவச வீட்டுமனை வழங்கப்படாத மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும், தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு காலி பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளை பணியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் மாவட்ட ஆட்சியர் சந்திப்பின் போது வலியுறுத்தப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளி நல வாரிய உறுப்பினர் பேராசிரியர் தீபக் தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் சந்திப்பில், நிர்வாகிகள் மாநில துணைப் பொதுச் செயலாளர் சேக் முகமது, மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் இஸ்ரேல் தாமஸ், மாவட்ட மாவட்ட துணைத் தலைவர் ஜெகநாதன், இணைச் செயலாளர் இலியாஸ் மைதீன், மாவட்ட அவைத் தலைவர் சுப்பிரமணியன், மாநில குள்ளத்தன்மை அணியின் மாநிலச் செயலாளர் நிர்மலா, மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜெயந்தி, மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் அருணா, செயற்குழு உறுப்பினர்கள் முக்காண்டி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகேசன், வெங்கடேசன், கருப்பசாமி, கலிங்கப்பட்டி, பாலசுப்பிரமணியம் மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com