இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
பகுதி -2
கப்ளிசேட்
அப்பாஸிய பேரரசு -19
( கி.பி 750-1258)
அப்போதைய இஸ்லாமிய ஆட்சிப்பீடம் மூன்று தலைமைகளை பிரதானமாக கொண்டு இருந்தது.
பாக்தாத்தை தலைநகராக கொண்டு அப்பாஸிய மன்னர்களும், ஸ்பெயின் கொரடோவாவை தலைமை இடமாக கொண்டு உமைய்யாக்களும், எகிப்தை தலைமை இடமாக கொண்டு பாத்திமியாக்களும் ஆட்சி புரிந்தனர்.
பாத்திமிய அரசு வீழ்ந்த பிறகு சலாவுதீன் அய்யூபி அவர்கள் எகிப்தை கைப்பற்றினார்.
சலாவுதீன் அய்யூபி அவர்கள் ஈராக்கில் நஜுமுத்தீன் அய்யூபி என்பவரது மகனாக பிறந்தார்.
பிறகு டமாஸ்கசில் வளர்ந்தார். எகிப்தில் ஆட்சியை பிடித்தார்.
அஸ்பன்,நூபியா, ஏமன் வரை வெற்றி பெற்ற அய்யூபி அவர்களை, சிலுவைப்போர் வீரர்களை எதிர்க்க டமாஸ்கசிற்கு நூர்தீன் ஜங்கி அவர்கள் அழைத்த போது,
இந்த பகுதிகளின் வெற்றி மற்றும் ஆட்சிகளை நிறுவ வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் சலாவுதீன் அய்யூபி அவர்களால் போகமுடியவில்லை.
அதனை கடிதமாக நூர்தீன் ஜங்கி அவர்களுக்கு சலாவுதீன் அய்யூபி அவர்கள் தெரிவிக்க, அதனை ஏற்றுக் கொண்டார் நூர்தீன் ஜங்கி.
சலாவுதீன் அய்யூபி அவர்கள் அலெப்பே சென்றுவிட்டபோது சிலுவை வீரர்கள் எகிப்தை முற்றுகையிட்டனர். திரும்பி வந்து சலாவுதீன் அய்யூபி அவர்கள் எகிப்தை மீட்டெடுத்தார்.
சியாக்களின் தூண்டுதலால் சலாவுதீன் அய்யூபியை கொலை செய்ய ஒரு கும்பல் முயற்சித்து தோல்வி அடைந்தது.
எகிப்தின் மன்னராக பதவி ஏற்ற சலாவுதீன் அய்யூபி அவர்களின் அமைச்சராக பஹாவுத்தீன் என்பவர் நியமிக்கப்பட்டார்.
பஹாவுத்தீன் அவர்கள் முறையற்ற வரிகளை நீக்கினார். ஏராளமான பாடசாலைகள் அமைக்கப்பட்டன. அறிஞர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
சலாவுதீன் அய்யூபி அவர்கள் தனது மகன்கள் அஜீஸ் மற்றும் அப்சால் மூவரும் அலெக்சாந்திரியா சென்று ஹதீஸ் கலை வல்லுநர் சலபி இமாமிடம் ஹதீஸ் பாடம் கற்றனர்.
சட்டமேதை ஈசா அவர்களை சிலுவைப்போர் வீரர்கள் கைது செய்தபோது, அவர்களுக்கு 6 லட்சம் தீனார்கள் இழப்பீடாக கொடுத்து அவர்களை சலாவுதீன் அய்யூபி அவர்கள் மீட்டார்கள்.
அல் அஸ்கர் பல்கலைகழகத்தில் இருந்த இஸ்மாயிலியா கோட்பாடுகளை நீக்கி சுன்னத்து வல் ஜமாத் கொள்கைகளை போதிக்க ஏற்பாடு செய்தார்.
சிலுவை வீரர்கள் எகிப்திய வணிகர்களை தாக்கி கொள்ளையிட்டு அவர்களை சிறைபிடித்து கொண்டனர்.
அவர்களை மீட்க ஹித்தீனில் நடந்த போரில் சிலுவைப்படை வீரர்களை தோற்கடித்தார்.
அவர்களிடம் மிகக்குறைவான இழப்பீடுகளை பெற்றுக் கொண்டு அவர்களை விடுதலை செய்தார்.
இழப்பீடு செலுத்த முடியாதவர்களுக்கு தன் சொந்தப் பணத்திலிருந்து இழப்பீடு செலுத்தி அவர்களை விடுதலை செய்ய வைத்தார்.
போரில் கிடைத்த குழந்தையை எந்த இழப்பீடுகளும் இல்லாமல் கருணையோடு அதன் தாயிடத்தில் ஒப்படைத்தார்.
சலாவுதீன் அய்யூபி அவர்கள் செய்த ஒரு செயல் உலக வரலாற்றில் எந்த மன்னரும் செய்யாத விந்தையானது. என்ன செயல்?
வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!
You must be logged in to post a comment.