Home செய்திகள்மாநில செய்திகள் பெங்களூரு – நாகர்கோவில் ரெயில் திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கம்..

பெங்களூரு – நாகர்கோவில் ரெயில் திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கம்..

by Askar

பெங்களூரு – நாகர்கோவில் ரெயில் திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கம்..

சேலம் கோட்ட ரெயில்வே சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது;

திருநெல்வேலி-மேலப்பாளையம் ரெயில் பாதையை இரட்டிப்பாக்கும் பணி நடக்கிறது.

இதனால் நாகர்கோவில் கோவை முன்பதிவற்ற ரெயில் இயக்கம் நாளை (23-ந் தேதி) முதல் 28-ந் தேதி வரை நாகர்கோவில்-திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்படுகிறது.

மறு மார்க்கத்தில் கோவையில் இருந்து இயக்கப்படும் ரெயில் திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும்.

பெங்களூரு-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 27-ந் தேதி வரை திண்டுக்கல்-நாகர்கோவில் வரை ரத்து செய்யப்படுகிறது.

மறுமார்க்கத்தில் நாளை முதல் வருகிற 27-ந் தேதி வரை திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு பெங்களூருக்கு சென்றடையும்.

ஈரோடு-செங்கோட்டை முன்பதிவற்ற எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை முதல் வருகிற 27-ந் தேதி வரை வாஞ்சி மணியாச்சி-செங்கோட்டை இடையே ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் இயக்கப்படும் ரெயில் வாஞ்சி மணியாச்சி புறப்பட்டு ஈரோட்டை அடையும்.

நாளை (23-ந் தேதி) தாதரில் புறப்பட்டு நெல்லையை அடையும் தாதர் எக்ஸ்பிரஸ் ரெயிலின் இயக்கம் மதுரை-நெல்லை இடையே ரத்து செய்யப்படுகிறதது.

மறு மார்க்கத்தில் வருகிற 28-ந் தேதி நெல்லையில் புறப்பட வேண்டிய தாதர் எக்ஸ்பிரஸ் ரெயில் மதுரையில் இருந்து புறப்படும்.

நாளை (23-ந் தேதி) இயக்கப்படும் ஸ்ரீமாதா வைஷ்ணோ தேவி கத்ரா-நெல்லை வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் திருச்சி-நெல்லை இடையே ரத்து செய்யப்படுகிறது.

வருகிற 24-ந் தேதி தாதரில் இருந்து நெல்லை செல்லும் தாதர் எக்ஸ்பிரஸ் விருதுநகர்-நெல்லை இடையே ரத்து செய்யப்படும்.

மறு மார்க்கத்தில் வருகிற 26-ந் தேதி நெல்லையில் புறப்பட வேண்டிய தாதர் எக்ஸ்பிரஸ் விருதுநகரில் புறப்படும்.

வருகிற 25-ந் தேதி நெல்லையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு புறப்பட வேண்டிய சிறப்பு ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!