Home செய்திகள்உலக செய்திகள் தென்காசி மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்; பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு..

தென்காசி மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்; பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு..

by Abubakker Sithik

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் இராஜகோபாலப்பேரி ஊராட்சியில் குடியரசு தினத்தன்று கிராம சபைக்கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. கிராம சபைக் கூட்டத்தில் ஊராட்சியின் முதல் 3 காலாண்டிற்கு வரவு செலவு மற்றும் கிராம ஊராட்சியின் கடந்த ஆண்டு தணிக்கை அறிக்கை மற்றும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகள் ஜல்ஜீவன் மிசன் திட்டப்பணிகள், தூய்மை பாரத இயக்கம், பிரதமமந்திரி ஊரக குடியிருப்புத்திட்டம், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை திட்டம், அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியத்தின் வளர்ச்சி பணிகள், மேலும் ஊராட்சி அடிப்படை வளர்ச்சி பணிகள் செய்வது குறித்து போன்ற 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கிராமசபைக் கூட்டத்திற்கு சுமார் 227 நபர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தோட்டக்கலைத் துறை சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்கம் வெங்காய சேமிப்பு கிடங்கு மானியம் ரூ.87,500, கத்தரி மற்றும் குழிதட்டு நாற்றுகள் மானியத் திட்டம் விவாதிக்கப்பட்டது. வேளாண்மை துறை மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம், PM KISSAN திட்டம் ஆகியவை பற்றி எடுத்து கூறப்பட்டது.

இக்கூட்டத்தில் ஊராட்சி மன்றத்தலைவர் K.கிருஷ்ணஜெயந்தி, மாவட்ட துணை ஆட்சியர் (பயிற்சி) செல்வி. கவிதா, ஊரகவளர்ச்சி உதவி இயக்குனர் (கிராம ஊராட்சிகள்) பிரான்சிஸ் மகராஜன், மாவட்ட சமூக நல அலுவலர் செல்வி. மதிவதனா, தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் ஜெயபாரதி மாலதி, வீ.கே.புதுார் வட்டாட்சியர் அழகப்பராஜா, தென்காசி உதவி இயக்குநர் இயக்குநர் அலுவலக கண்காணிப்பாளர் முருகையா, தலைமையிடத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (தணிக்கை மற்றும் பற்றாளர்) அ. கணேசன், மண்டல துணை வட்டாட்சியர் முருகன், வீ.கே.புதுார் வருவாய் ஆய்வாளர் இசக்கிமுத்து, வீ.கே.புதூர் கிராம நிர்வாக அலுவலர் பத்மாவதி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பி.வேதங்கண்ராஜ், ஊராட்சி செயலர் நவநீதகிருஷ்ணன் மற்றும் அனைத்து ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!