Home செய்திகள்உலக செய்திகள் அகில இந்திய துணைத் தேர்வு; தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் முக்கிய அறிவிப்பு..

அகில இந்திய துணைத் தேர்வு; தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் முக்கிய அறிவிப்பு..

by Abubakker Sithik

அகில இந்திய துணைத் தேர்வு; தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் முக்கிய அறிவிப்பு..

அகில இந்திய துணைத் தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பை தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் வெளியிட்டுள்ளார். இது பற்றிய செய்திக் குறிப்பில், கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் 2017-2019-ல் இரண்டாண்டு தொழிற் பிரிவில் சேர்க்கை செய்யப்பட்டு, அனைத்து தகுதி இருந்தும் தேர்வில் கலந்து கொள்ள இயலாத மற்றும் தேர்வில் தேர்ச்சி பெறாத பயிற்சியாளர்களுக்கு அகில இந்திய துணைத் தேர்வு 2024- ல் (for Semester System only) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, துணைத் தேர்வு தொடர்பாக முன்னாள் பயிற்சியாளர்கள் தாங்கள் பயின்ற தொழிற் பயிற்சி நிலையங்களை 15.02.2024 தேதிக்குள் தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட பாடங்களுக்கான தேர்வுக் கட்டணத்தை தொழிற்பயிற்சி நிலைய வழிகாட்டுதலின் படி செலுத்தி, இந்த நல்வாய்ப்பினை பயன்படுத்தி துணைத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், அகில இந்திய துணைத் தொழிற்தேர்வு மார்ச் 2024, குறித்த தகவல்களை உடனுக்குடன் பெற http://skilltraining.tn.gov.in, https://ncvtmis.gov.in ஆகிய இணைய தளங்களில் அறிந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இது தொடர்பாக, மேல் விவரங்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கி வரும், தென்காசி மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை 04633-298088 என்ற தொலைபேசி எண் மற்றும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com