Home செய்திகள்உலக செய்திகள் தென்காசியில் AICCTU-TNCSC சார்பில் மாநிலம் தழுவிய விடுப்பு-மறியல் போராட்டம்..

தென்காசியில் AICCTU-TNCSC சார்பில் மாநிலம் தழுவிய விடுப்பு-மறியல் போராட்டம்..

by Abubakker Sithik

தென்காசியில் AICCTU-TNCSC சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் மாநிலம் தழுவிய விடுப்பு-மறியல் போராட்டம் நடந்தது. சிவில் சப்ளை சுமை தூக்கும் தொழிலாளிகளுக்கு உடனடியாக பச்சை அட்டை வழங்க வேண்டும். அனைவரையும் பணி நிரந்தரப்படுத்த வேண்டும். ஞாயிற்றுக் கிழமை பணிக்கு வர கட்டாயப்படுத்த கூடாது. அட்டி கூலி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். பி எஃப் பிடித்தம் செய்திட வேண்டும். சுமைப் பணியில் அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை ஆர்ப்பாட்டம் மற்றும் மாநில தழுவிய சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு AICCTU தென்காசி மாவட்ட பொதுச் செயலாளர் M. வேல்முருகன் தலைமை வகித்தார். TNCSC சுமைபணி மாவட்ட நிர்வாகிகள் B. குருசாமி, A. பத்திரகாளி, T.N. மாரியப்பன், K. சுப்பிரமணியன், N. இசக்கி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மறியல் போராட்டத்தை CPIML தென்காசி மாவட்ட செயலாளர் T. புதியவன் (எ) சுப்பிரமணியன் துவக்கி வைத்து பேசினார். AICCTU மாவட்ட துணை தலைவர்கள் S. தம்பித்துரை, P. முத்துலட்சுமி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இதில், கடந்த 2011ஆம் ஆண்டு வரன்முறைபடுத்தபட்ட அனைத்து சுமை பணியாளர்கள் 3525 பேர்களுக்கு 2020 லிருந்து பச்சை அட்டை வழங்க வேண்டும். வார விடுமுறை ஊதியத்தை நடைமுறைபடுத்த வேண்டும். பணி பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து பணிபுரியும் சுமை தூக்குவோரை அரசின் உத்தரவுபடி வரன் முறைபடுத்தி அடையாள அட்டை வழங்க வேண்டும். PF பிடித்தம் செய்ய வேண்டும். சுமை தூக்கும் பணி மற்றும் தூய்மை பணியில் அவுட்சோர்ஸ் முறையை கைவிட வேண்டும். வாகன ஒப்பந்ததாரர்கள் ஓவர்லோடிற்கு சுமை பணியாளர்களுக்கு உழைப்பிற்கு ஏற்ற அட்டிகூலி பேச்சுவார்த்தை மூலம் வழங்கும் முறையை தொடர நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்ற பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் CPIML கிளைச் செயலாளர்கள் V. மாடசாமி, S. அப்பாஸ் ஆகியோருடன், தென்காசி, ஆலங்குளம், செங்கோட்டை, தேன்பொத்தை, வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய பகுதி சிவில் சப்ளை குடோன் சுமை பணியாளர்கள் பலர் பங்கேற்றனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com