Home செய்திகள்உலக செய்திகள் ஊர்காவல் படைக்கு ஐசிஐ பள்ளியில் தேர்வு; தென்காசி மாவட்ட எஸ்.பி அறிவிப்பு..

ஊர்காவல் படைக்கு ஐசிஐ பள்ளியில் தேர்வு; தென்காசி மாவட்ட எஸ்.பி அறிவிப்பு..

by Abubakker Sithik

ஊர்காவல் படைக்கு ஐசிஐ பள்ளியில் தேர்வு; தென்காசி மாவட்ட எஸ்.பி அறிவிப்பு..

தென்காசி மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள ஆண், பெண் ஊர்க்காவல் பணியினரை தேர்வு செய்வதற்கு தென்காசி I.C.I பள்ளி மைதானத்தில் 11.02.2024 அன்று தேர்வு நடைபெற உள்ளதாக மாவட்ட எஸ்.பி அறிவித்துள்ளார். இது தொடர்பான மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அறிவிப்பில், தென்காசி மாவட்ட ஊர்க்காவல் படையில் பணிபுரிவதற்கு தகுதியுடைய ஆண்கள் மற்றும் பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

அதன் விபரம் பின்வருமாறு, இடம் : Play Ground, I.C.I. Higher Sec. School, Tenkasi. நாள் : 11/02/2024 Time : 09:00Am. காலிப்பணியிடம் : 21 (ஆண்கள் – 20, பெண்- 01) , வயது : 18 முதல் 50 வரை. உடற்தகுதி : நற்குணம் மற்றும் நல்ல உடற்தகுதியுடையவர்கள். கல்வித்தகுதி : 10ஆம் வகுப்பு தேர்ச்சி /தோல்வி. வசிக்கும் மாவட்டம் : தென்காசி மாவட்டம்.

தேர்வின் போது கொண்டு வரவேண்டிய அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள் : 1. கல்விச்சான்றிதழ் (TC), 2. மதிப்பெண் பட்டியல், 3. குடும்ப அட்டை, 4. வாக்காளர் அடையாள அட்டை, 5. ஆதார் அடையாள அட்டை, 6. சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட சைஸ் புகைப்படம் -2 (இரண்டு)

குறிப்பு : தென்காசி மாவட்ட ஊர்க்காவல் படைக்கு தகுதியுடைய பட்டதாரி இளைஞர்கள், தொண்டு உள்ளம் கொண்டவர்கள், விளையாட்டு வீரர்கள், தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட சான்றிதழ் பெற்றவர்கள், முன்னாள் இராணுவத்தினர் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். தேர்வில் கலந்து கொள்ள வருபவர்கள் தங்கள் சொந்த செலவிலேயே வந்து செல்ல வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com