பழனியில் பட்ட பகலில் பெண்ணிடம் பர்சை பறித்த நபர்! விரட்டி பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்..
பழனி மத்திய பேருந்து நிலையத்தில் தாராபுரத்தை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் மகனை கரூருக்கு பஸ் ஏற்றி விட வந்தார் இவர் பஸ் ஏறும் பொழுது பின் தொடர்ந்த தேவா என்பவர் பர்சை பிடுங்கிக் கொண்டு ஓடினார். உடனே ராஜேஸ்வரி திருடன் திருடன் என்று கூச்சிலிட்டார் அதனால் பொதுமக்கள் ஓடி திருடனை விரட்டி பிடித்து தர்ம அடி கொடுத்து பழனி நகர காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
ராஜேஸ்வரி போலீசாரிடம் புகார் கொடுத்ததை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை செய்ததில் சொந்த ஊர் கொடைக்கானல் இங்கு பழனி சத்யா நகர் அண்ணாசாலையில் மனைவியுடன் வசித்து வருவதாகவும், மனைவியிடம் சண்டையிட்டதால் சாப்பாட்டிற்கு பணம் இல்லாமல் பசிக்காக பர்சை பிடுங்கினேன் என்று வாக்குமூலம் அளித்தார். பழனி பஸ் நிலையத்தில் பட்டப் பகலில் பெண்ணிடம் பர்சை பிடுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பழநி- ரியாஸ்
You must be logged in to post a comment.