Home செய்திகள் தூய செபஸ்தியார் கோயில் ஆண்டுத் திருவிழா மற்றும் தேர் பவனி…

தூய செபஸ்தியார் கோயில் ஆண்டுத் திருவிழா மற்றும் தேர் பவனி…

by ஆசிரியர்

காரைக்கால் திருநள்ளாறு ரோட்டுக்கு அருகில் தூய செபஸ்தியார் கோயில் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் ஆண்டுத் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தாண்டு தூய செபஸ்தியார் ஆலயத்தின் ஆண்டுத் திருவிழா கடந்த 25.04.2019 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் மறை ஆசீர், மன்றாட்டு, கூட்டுத் திருப்பலிகள் நடைபெற்று வந்தன.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருவிழா சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதன் பின்னர் மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அந்தோணியார், தோமையர், மெக்கேல் அடிகளார் மற்றும் செயஸ்தியாரின் சொரூபங்கள் வைக்கப்பட்டு தேர் பவனி நடைபெற்றது. ஆலயத்தை சுற்றி 4 வீதிகளை வலம் வந்த தேர் பவனி மீண்டும் கோயிலை வந்தடைந்தது. இந்நிகழ்ச்சியில் காரைக்கால் , திருநள்ளாறு, கோட்டுச் சேரி உள்ளிட்ட இடங்களிலிருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதனிடையே திருவிழாவையொட்டி நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கறி சாப்பாடு சாப்பிட்ட சிலர் வாந்தியெடுத்து அடுத்தடுத்து மயக்கமடைந்து விழுந்ததாகவும் அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் பரவியது. இதனால் ஆலயத்தில் பக்தர்களுக்கிடையே பரபரப்பு ஏற்பட்டது. நாளை (05.05.2019) மாலை கொடியிறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவடைகிறது.

செய்தி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!