Home செய்திகள் செயல்படாத அரசு இ-சேவை மையங்களால் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் பரிதவிப்பு..

செயல்படாத அரசு இ-சேவை மையங்களால் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் பரிதவிப்பு..

by ஆசிரியர்

நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே செயல்படாத அரசு இ-சேவை மையங்களால் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

பொதுமக்களும், மாணவ, மாணவியரும், வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் சான்றுகளான இருப்பிட சான்று, வருவாய் சான்று, சாதி சான்று, பட்டா, சிட்டா, வாரிசு சான்று, உள்ளிட்ட சான்றுகள் வசிக்கும் இடத்திலேயே வாங்கிடவும்,

மின் கட்டணம், குடிநீர் கட்டணம் உள்ளிட்டவைகளை ஆன்லைன் மூலம் செலுத்திடவும் தமிழக அரசு ஒவ்வொரு ஊராட்சியிலும், பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளிலும் இ-சேவை மையங்கள் அமைக்கப்பட்டு செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில் பல இ-சேவை மையங்கள் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை புதுவாழ்வு திட்டம் மற்றும் மகளிர் திட்டம் மூலம் இயக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்பெறும் நிலையில் சுரண்டை அருகே உள்ள கிராமங்களில் பல இ-சேவை மையங்கள் செயல்படாமல் பல நாட்களாக பூட்டியே கிடப்பதால் இப்பகுதி பொதுமக்கள் பெரும் சிரமத்தை தினமும் சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் சுரண்டை அருகே உள்ள ஆனைகுளம்,பொய்கை, ஊர்மேலழகியான், வேலாயுதபுரம், இடைகால் உள்ளிட்ட கிராமப்புற பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அரசு இ-சேவை மையங்கள் பல நாட்கள் செயல்படாமல் பூட்டியே கிடக்கும் அவல நிலை காணப்படுகிறது.

தற்போது பள்ளி தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளதால் பள்ளி மாணவ மாணவிகள் மேற்படிப்புகளுக்கு தேவையான சான்றுகள் ஏதும் வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் தேவையான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com