திருவல்லம் கோவில் தேர்த்திருவிழாவை துவக்கி வைத்த அறநிலையத்துறை அமைச்சர் ..

திருவல்லம் வில்வ நாதீஸ்வரர் கோவில் பிரம்ம உற்வசம் முன்னிட்டு நடைபெற்ற தேர்த்திருவிழாவை தமிழக அறநிலைத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பூஜை செய்து துவக்கி வைத்து பின்புவில்வ நாதீஸ்வரரை தரிசனம் செய்தார்.

வேலூர் மாவட்டம் திருவல்லம் வில்வநாதீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழர இன்று நடைபெற்றது.இதில் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பூஜை செய்து தேர்வடத்தை பிடித்து இழுத்து துவக்கி வைத்தார்.

வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் ரவி எம்எல்ஏ., இந்து அறநிலை துறை இணை ஆணையர் அசோக்குமார், வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் ஆனந்தன், ஒன்றிய செயலாளர்கள் காட்பாடி சுபாஷ், சோளிங்கர் சின்னதுரை, மற்றும் கட்சியினர் அறநிறை துறை செயல் அலுவலர்கள் கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

வேலூரிலிருந்து கே.எம்.வாரியார்