கீழக்கரை தாசீம் பீவி கல்லூரி மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி..தொடரும் பேரணிகள்..

கீழக்கரையில் இன்று (06-02-2017) தாசீம் பீவி பெண்கள் கல்லூரி சார்பாக சீம கருவேல மரங்களின் தீமைகளை விளக்கும் விதமாக பேரணி நடத்தப்பட்டது.

இந்த பேரணியில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டு கருவேல மரங்களின் தீமைகளை விளக்கும் வண்ணம் பதாகைகளை ஏந்தி சென்றனர். இந்தப் பேரணியை கல்லூரி முதல்வர் சுமையா கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.  மேலும் கல்லூரியின் பல் வேறு துறைகளின் பேராசிரியர்கள் முன்னிலையில்  நடைபெற்றது.  இந்த விழிப்புணர்வு பேரணி கீழக்கரையின் முக்கிய பகுதிகளில் சென்றது.

தாசீம் பீவி கல்லூரி நிர்வாகம் தங்கள் கல்லூரி மாணவிகள் மட்டும் அல்லாமல் பிற பள்ளி மாணவ, மாணவிகளையும் கரு வேல மர ஒழிப்பு பணியில் ஊக்குவிப்பது குறிப்பிடத்தக்கதாகும்.