தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் பெண்களுக்கான தொழில்முனைவோர் வழிகாட்டி கருத்தரங்கம்…

தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் பெண்களுக்கான தொழில்முனைவோர் வழிகாட்டி கருத்தரங்கம் மார்ச் 10 மற்றும் 11 ஆகிய இரு தினங்களில் நடைபெற்றது. இறைவணக்கத்துடன் தொடங்கிய இக்கருத்தரங்கத்தில் கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.சுமையா துவக்க உரை மற்றும் பெண்களுக்கான வேலை வாய்ப்புகள் பற்றி கூறினார்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கே.எஸ்.கமாலுதீன், தொழிலதிபர் மற்றும் தொழில்முனைவர் ஆலோசகர் வீட்டிலிருந்தே செய்யக்கூடிய பெண்களுக்கான சிறுதொழில் வாய்ப்புகள் என்ன என்பதை விளக்கி கூறினார். பின்னர் அல்லீஸ்பாக், நிறுவனர் ஒருங்கிணைந்த பண்ணை மற்றும் ஆராய்ச்சி பயிலகம், இழந்தங்குடி மாடி வீட்டுத் தோட்டம் நமக்குத் தேவையான காய்கறிகளை இயற்கையான முறையில் நாமே வீட்டில் பயிரிடலாம் மற்றும் கால்நடை பண்ணை எப்படி அமைத்தல் என்றும் எடுத்துக்கூறினார். அதை தொடர்ந்து கே.ராஜா முகம்மது டி.என்.டி.எஸ் கம்ப்யூட்டர் எஜிகேசன் மத்திய மாநில அரசுகளிடம் நிதி பெற்று தொழிற்பயிற்சி மையங்கள் நடத்துவது எப்படி என்றும் கருத்தரங்கத்தில் கூறினார். அதேபோல் ஹாஜி அலி, செயலாளர், ஜன்சேவா, இராமநாதபுரம் தொழில் தொடங்குவதற்கு வட்டியில்லா கடன் பெறுவது எப்படி என்பது போன்ற செய்திகள் பற்றி கூறினார். எ.ஸாதியா பர்வீன் உரிமையாளர், நூருல் லைட்ஸ் பல்ப் தயாரிப்பது எப்படி என்றும் விளக்கினாnர்.

இக்கருத்தரங்கத்தில் கல்லூரி மாணவிகள், பெண்கள், மகளிர் குழு உறுப்பினர் போன்ற 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக ஹசிஸ்தா முதலாமாண்டு உளவியல் துறை மாணவி நன்றியுரை வழங்க இனிதே இக்கருத்தரங்கம் நிறைவுற்றது. இக்கருத்தரங்கத்திற்கான ஏற்பாடுகளை தொழில்முனைவோர், பெண்கள் மேம்பாட்டு மைய உறுப்பினர்கள் மற்றும் சீதக்காதி அறக்கட்டளையின் துணைப்பொது மேலாளர் சேக் தாவூத்கான் ஆகியோர் செய்திருந்தனர்.