
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியர்கள் மற்றுக் மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழா கல்லூரி தலைவர் எஸ்.எம்.யூசுப் சாகிப் முன்னிலையிலும், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன் தலைமையிலும் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக தொழில் நுட்ப கல்வி இயக்கத்தின் கூடுதல் இயக்குநர் டாக்டர்.அருளரசு கலந்து கொண்டார்.
மேலும் கல்லூரியில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கபட்டது. இவ்விழாவிற்க்கு வருகை தந்த அனைவரையும் துணைமுதல்வர் இராஜேந்திரன் வரவேற்றார்.
மேலும் இவ்விழாவில் முதன்மை செயல் அலுவலர் மணிவண்ணன், பொறியியல் கல்லூரி டீன் முகம்மது சகபர், முதல்வர் அப்பாஸ் மைதீன், செய்யது ஹமீதா கல்லூரி முதல்வர் ரஜபுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.