
இராமநாதபுரம் மாவட்ட காவல் துறையின் சார்பில் (17-03-2018)மாவட்ட காவல் அலுவலத்தில் “மதுவின் தீமைகளும் மாணவர்களின் பங்களிப்பும்” எனும் தலைப்பில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீணா தலைமையில் நடைபெற்றது.
இதில் பல்வேறு பள்ளிகளில் இருந்து 25 மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பாக பேசினர். முடிவில் நடுவர்கள் குழு முதல் மூன்று இடங்களை பெற்றவர்களை அறிவித்தனர்.
நேஷனல் மெட்ரிகுலேசன் பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவி தர்ஷனா முதல் இடத்தையும், புனித ஜோசப் பள்ளி மாணவியின் ஒன்பதாம் வகுப்பு ரத்னாஸ்ரீ இரண்டாம் இடத்தையும், நேஷனல் மெட்ரிகுலேசன் பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவி யுவஸ்ரீ மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ரொக்க பரிசு மற்றும் கோப்பையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அளித்து பாராட்டினார்கள்.
இந்நிகழ்வில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை மற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
You must be logged in to post a comment.