நாறிக் கிடக்கும் ‘நடுத்தெரு’ 18 வது வார்டு பகுதி – நிலை மாறுமா…? நடவடிக்கை எடுக்குமா.. கீழக்கரை நகராட்சி

dav

கீழக்கரை நகராட்சி நடுத் தெரு ஜும்மா பள்ளி பகுதியில் இன்று அதிகாலை முதல் கீழை மர செக்கு நிறுவனம் அருகாமையில் இருந்து ஜும்மா பள்ளி பின் வாசல் வரை வழிந்தோடும் சாக்கடை நீரால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். பள்ளி செல்லும் சிறுவர்களும், நடைபாதையில் செல்லும் பெரியவர்களும் நடந்து செல்ல வழி இல்லாமல் தட்டுத் தடுமாறி பாதையை கடந்து சென்று வருகின்றனர்.

பல்லலாண்டு காலமாக அடிக்கடி திடீரென சாக்கடை நீர் பெருக்கெடுத்து ஓடும் பகுதியாக இந்த நடுத் தெரு ஜும்மா பள்ளி பகுதி இருக்கிறது. இதற்கு மிக முக்கிய காரணியாக பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாததும் ஒன்றாகும். நடுத் தெரு ஜும்மா பள்ளி பின் பகுதி முழுவதிலும் செங்கல், மணல், ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களை எவ்வித முன்னறிவிப்பும் இன்று கொட்டி விட்டு பல நாள்கள் கழித்து தான் அள்ளிசெல்கின்றனர்.

அது போல இந்த பகுதியில் வீடு கட்டுபவர்கள் முறையாக சாக்கடை வாருகால்களை மூடி போட்டு சரி செய்து விட்டு கட்டுமான வேலைகளை பார்ப்பதில்லை. இதனால் கட்டுமான சாமான்கள் சாக்கடை வாருகால்களுக்குள் விழுந்து சாக்கடை ஓட வழியில்லாமல் பொங்கி எழுந்து சாலையில் ஓடுகிறது. இது குறித்து நகராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.