சேது வித்யாலயா பள்ளி ஆண்டு விழா..

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகேயுள்ள குஞ்சார் வலசை சேது வித்யாலயா பள்ளியில் 11-ம் ஆண்டு விழா அரசு வழக்கறிஞர் செளந்தர பாண்டியன் தலைமையில் நடைபெற்ற விழாவில் பள்ளி தாளாளர் ஆடல் அரசன், அறங்காவலர் முனியசாமி முன்னிலை வகித்தனர்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக இந்தியன் கோஸ்ட் கார்ட் மண்டபம் நிலைய கமாண்டிங் அதிகாரி வெங்கடேசன், நர்சரி மற்றும் துவக்கப்பள்ளி நலச் சங்க மாநில பொதுச் செயலாளர் சதீஸ், நர்சரி துவக்கப்பள்ளி நலச் சங்க மண்டபம் ஒன்றிய தலைவர் முகைதீன் பக்கீர், செயலாளர் பெரியசாமி மற்றும் நர்சரி துவக்கப்பள்ளி களைச் சேர்ந்த தாளாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக சேது வித்யாலயா பள்ளி முதல்வர் கவிதா சாமிநாதன் ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் விளையாட்டு போட்டி களில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழா முடிவில் பள்ளி ஆசிரியை சூரியா நன்றியுரை நிகழ்த்தினார்.