இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடலில் இரட்டை வலை மீன்பிடியில் ஈடுபடும் வெளியூர் படகுகளை வெளியேற்றக்கோரி மண்டபம் மீனவர்கள் 01/02/19 முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர். தடை செய்யப்பட்ட வலை மீன்பிடிக்கு உடந்தையாக செயல்படும் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி 05/02/19ல் உண்ணாவிரதம் போராட்டம் மேற்கொண்டனர். மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் வேண்டுகோளை ஏற்று உண்ணாவிரதம் 1மணி நேரத்தில் விலக்கி கொள்ளப்பட்டு சமரசக் கூட்டம் கோட்டாட்சியர் சுமன் தலைமையில் இராமநாதபுரத்தில் நடந்தது.
இதில் மண்டபம் மீனவர்களின் கோரிக்கைகளுக்கு படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எழுத்து பூர்வமாக உறுதியளித்தனர். இதையடுத்து காலவரையற்ற போராட்டத்தை மீனவர்கள் தற்காலிகமாக விலக்கி கொண்டு படகுகளை தொழிலுக்கு அனுப்புவதென முடிவு எடுத்தனர். இதன்படி மண்டபம் மீனவர்கள் நாளை (09/02/19 ) கடலுக்குச் செல்கின்றனர்.
You must be logged in to post a comment.