திண்டுக்கல்லில் திட்ட இயக்குனரை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தாக்கியதாக கூறி ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் …

திண்டுக்கல் மாவட்டம் ஊரக வளர்ச்சி துறையினர் சார்பாக சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள DRDA அலுவலகத்தில் இருந்த திட்ட இயக்குனரை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உமாதேவன் சந்திக்க வந்துள்ளார்.

அப்போது இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் திட்ட இயக்குநரையும் மற்றும் உடன் இருந்த அதிகாரிகளையும் தாக்க வந்ததாக கூறி இன்று (12/12/2018) திண்டுக்கல் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பாக ஆர்பாட்டம் நடந்தது.

இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உமாதேவன் மீது காவல்துறை உடனடியாக வழக்குப்பதிவு செய்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,  அரசு அலுவலர்களை பணி செய்யவிடாமல் தடுத்து அதிகரிகளை தாக்க வந்து அநாகரீக செயல்களில் ஈடுபடும் அரசியல்வாதிகள் மீது கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் ஊரக வளர்ச்சி துறை சங்கம் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.

செய்தி:- ஜெ.அஸ்கர் – திண்டுக்கல்..