ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தினை கண்டித்து விரைவில் ஆலையை நோக்கி போராட்டம் – தமிழ் விவசாயிகள் சங்க தலைவர் ஓ.ஏ.நாராயணசாமி…

கோவில்பட்டியில் தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஓ.ஏ.நாராயணசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில் தூத்துக்குடி குமரெட்டியபுரத்தில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து அக்கிராம மக்கள் போராட்டம் தொடங்கிய போது நாங்கள் ஆதரவு தெரிவித்தோம், ஆலை மூடப்பட்ட நிலையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு விவசாயிகள் ஆதரவு என்ற தோற்றத்தினை உருவாக்க ஸ்டெர்லைட் ஆலையின் சில நிர்வாகிகள் முயற்சி எடுத்துள்ளனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் கோவில்பட்டி பகுதியில் விவசாயிகள் அல்லாத சிலரை வைத்து கொண்டு, விவசாயிகள் சங்கம் என்ற பெயரில் ஆலைக்கு ஆதரவு என்பதனை போன்ற தோற்றத்தினை ஏற்படுத்த நினைக்கிறது. தூத்துக்குடி பகுதியில் ஆலைக்கு ஆதரவு நிலையை ஏற்படுத்த முடியாத நிலையில், கோவில்பட்டி பகுதியில் இப்பணியை கடந்த ஒரு வாரகாலமாக ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் முயற்சி எடுத்துள்ளது. இதற்கு தமிழ் விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவிப்பது மட்டுமின்றி, அடுத்த மாதம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளை திரட்டி கொண்டு, ஸ்டெர்லையை நோக்கி சென்று போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

செய்தி:- அஹமது, தூத்துக்குடி