முத்தலாக் சட்டத்தை எதிர்த்து ஆவேசமாக பேசிய அன்வர்ராஜா எம்.பி..

இன்று (27/12/2018) பாராளுமன்றத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான முத்தலாக் சட்டம் மீது விவாதம் நடந்தது.  அப்பொழுது இராமநாதபுரம் எம்.பி அனவர் ராஜா, அம்மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடுமையான கருத்துக்களை ஆவேசமாக பதிவு செய்தார்.

அவர் பேசியதாவது, இஸ்லாமிய இளைஞர்களுக்கு எதிரான முத்தலாக் சட்டத்தை கடுமையாக எதிர்க்கிறேன். இந்த மசோதாவை நிராகரிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டுகிறேன். முத்தலாக் சட்டம் காட்டுமிராண்டித்தனமாக இருக்கிறது. உணர்ச்சிகரமான விஷயத்தில் மத்திய அரசு கண்மூடித்தனமாக செயல்படுகிறது. ஷரியத் சட்டம் மனிதர் உருவாக்கியது அல்ல, இறைவனால் அனுப்பப்பட்டது.

முத்தலாக் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல, இறைவனுக்கு எதிரானது. முத்தலாக் மசோதா இறைவனுக்கு எதிரானது.  பணமதிப்பு ரத்தால் மதிப்பை இழந்துவிட்டீர்கள். ஜி.எஸ்.டியால் செல்வாக்கை இழந்துவிட்டீர்கள். செல்வாக்கை இழந்ததால் தான் பாரதிய ஜனதா 5 மாநில தேர்தலில் தோல்வி அடைந்துள்ளது, என பேசினார்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்