திருப்பரங்குன்றம் பகுதியில் தியாகராஜா பொறியியல் கல்லூரி கீழ் பாலத்தில் இருக்கும் தேங்கிய மழை நீர்தான் தற்போது நகரிலுள்ள பிரதான தலைவலியாக உள்ளது. தண்ணீர் ஓட்டமின்றி சாக்கடை தொட்டி போல் காட்சியளிக்கும் இப்பாலம் நீர் ஓடைகள் திட்டமிடப்பட்டு கட்டப்படாததால் நீரோட்டம் ஆங்காங்கே நின்று தேங்கிவிடுகிறது.
இந்தக் கால்வாய்கள் திறந்தவெளியில் அமைந்துள்ளதால் மக்கள் இதனை குப்பைத்தொட்டியாக பயன்படுத்துகின்றனர்.. தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவதாலும் அதனால் பல்வேறு விதமான நோய்களும்,, வாகன ஓட்டிகளும் பெரிதும் சிரமப்படுகின்றனர்.. இவ்வழியாக கல்லூரிக்கு செல்லும் வாகனங்கள் ஏறக்குறைய ஒரு நாளைக்கு நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கிறது. இவ்வழியாக ஓடும் தண்ணீரை அகற்றுவதற்கு மாநகராட்சி அதிகாரிகள் இதுவரை அக்கறை காட்டவில்லை.
இதனால் இந்த பகுதிகளில் சேரும் தண்ணீரை வெளியேற்றுவதற்கான கட்டமைப்புகளை இதுவரையிலும் முறையாக ஏற்படுத்துவதில்லை.. புதர் மண்டி பராமரிப்பில்லாமல் கிடக்கிறது. மழைநீர் முழுமையாக வெளியேற வழி இல்லாததால் தண்ணீரை பாதாள சாக்கடை வழியாக வெளியேற்றுகின்றனர்.. இதனால் அப்பகுதியில் அப்பகுதியில் செல்வோர் வாகன ஓட்டிகளும் துர்நாற்றம் வீசுவதால் பெரிதும் சிரமப்படுகின்றனர். ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இக்கீழ்பாலத்தினை சுத்தம் செய்வார்களா என பொறுத்திருந்து பார்ப்போம்.
மதுரை செய்தியாளர் : S.பெரியதுரை
You must be logged in to post a comment.