இலங்கை சுதந்திர தினமான இன்று (பிப்., 4) யாழ் பல்கலை., யில் ஏற்றப்பட்டு இருந்த தேசியக்கொடி இறக்கப்பட்டு கருப்புக்கொடி கொடி ஏற்றப்பட்டுள்ளது.
இலங்கையின் 71 வது சுதந்திர தினம் இன்று (04.02.2019) கொண்டாடப்படுகிறது. சுதந்திர தின நிகழ்சசிகள் நாட்டின் பல இடங்களில் நடைபெற்றன. வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் பகுதிகளில் சுதந்திர தினம் கருப்பு தினமாக அமல்படுத்தி கருப்பு கொடிகள் பறக்க விடப்பட்டது.
இந்நிலையில் சுதந்திர தினத்தை கருப்பு நாளாக அறிவிக்கப்பட்டதையடுத்து யாழ்ப்பாணம் பல்கலை., மாணவர்கள் பல்கலை.,யில் எமக்கு எப்போது சுதந்திர தினம் என எழுதிய பதாகைகள் பல்கலைக்கழகத்தைச் சூழ கருப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்கலை.,க்குள் ஏற்றப்பட்டிருந்த தேசியக்கொடி இறக்கப்பட்டு கருப்புக்கொடி கொடி ஏற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி:- முருகன் ..
You must be logged in to post a comment.