பரமக்குடியில் கடைகளில் கைவரிசை.. மர்ம ஆசாமிகளுக்கு வலை வீச்சு..

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மோட்டார் வாகன உதிரிபாகங்கள் விற்பனை கடை, ஜவுளி கடையிலும் பூட்டை உடைத்து கைவரிசை காட்டிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பரமக்குடி மணிநகரில் முதுகுளத்தூரை சேர்ந்த ரஞ்சித், அசோக் ராஜா, ஜனார்த்தனன் ஆகியோர் கூட்டாக சேர்ந்து மதுரா கார்ஸ் என்ற மோட்டார் வாகன உதிரி பாகங்கள் விற்பனை கடையை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை (04.02.19) கடையை திறக்க அசோக்குமார் வந்தார். அப்போது கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கடைக்குள் சென்று பார்த்தார். கார் டிவி., க்கள் டிவிடி இசை சாதனங்கள் ஸ்பீக்கர்கள் மற்றும் ரூ.40 ஆயிரம் மதிப்பிலான விலை உயர்ந்த பொருட்கள் திருடு போனது தெரிந்தது . இதே போல், பரமக்குடி காந்திஜி தெருவில் மணிவாசகம் என்பவருக்கு சொந்தமான ஜவுளி கடையிலும் பூட்டை உடைத்து ரூ. 2 லட்சம் மதிப்பிலான ரெடிமேட் உடைகள் திருடப்பட்டுள்ளது.

இப்புகாரின் பேரில் போலீஸ் மற்றும் கை ரேகை நிபுணர்கள் விசாரித்தனர். கடந்த சில நாட்களாக பரமக்குடியில் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால் வியாபாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.

செய்தி:- முருகன்..