திருச்சியில் நடைபெற்ற பொள்ளாச்சி பாலியல் கொடூரத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் வெல்ஃபேர் பார்ட்டி S.N.சிக்கந்தர் ஆவேச பேச்சு..

பொள்ளாச்சி பாலியல் கொடூரத்திற்கு எதிராக திருச்சியில்(20.03.19)நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கண்டன உரையாற்றிய S.N. சிக்கந்தர் ஆளும் கட்சி மீது கடும் கேள்வி கனைகளை தொடுத்தார்.

சமீபத்தில் பேசிய பாஜகவின் -இல.கணேசன்’ “பொள்ளாச்சி, தூத்துக்குடி விவகாரகங்கள் தேர்தலில் பாஜக கூட்டணியின் வெற்றியை பாதிக்கும் விசயங்களாக இருக்காது” என்றார்.

அதன் அடிப்படையில் பேசிய வெல்ஃபேர் கட்சியின் தேசிய பொருளாளர் எஸ் என் சிக்கந்தர்’ “பிஜேபிகாக பொள்ளாச்சி மக்கள் மானம் இழக்க வேண்டுமா? நாட்டுக்காக தூத்துக்குடி மக்கள் செத்துப்போக வேண்டுமா? என கேள்விகளை தொடுத்தார். மேலும் அவர் பேசுகையில் தமிழர்களின் உயிரை பற்றி மானத்தைப்பற்றி கவலைப்படாதவர்களுக்குதேர்தலில் தக்க பாடத்தை புகட்டுவோம் என்றார்.