கோச்சடை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலி..

மதுரை மாவட்டம் கோச்சடை காவல் சோதனைச் சாவடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தனியார் தண்ணி லாரி வாகன ஓட்டுனர் பலி ஆகியுள்ளார்.  மதுரை திருநகரை சேர்ந்த பழனி குமார் வயது 45. இவர்  வேலைக்கு இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் நிகழ்விடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து மதுரை கரிமேடு போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்