தென் இந்திய நுகர்வோர்&மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கவுன்சில் 27வது தென் இந்திய மாநாடு…

மதுரை காந்தி மியூசியம் அரங்கில் தென் இந்திய நுகர்வோர்&மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கவுன்சில் 27வது தென் இந்திய மாநாடு மற்றும் உலக நுகர்வோர் தினவிழா மற்றும் சிறப்பு நுகர்வோர் விருதுகள் வழங்கும் விழா தென் இந்திய தலைவர் வழக்கறிஞா் மணவாளன் தலைமையிலும், தென் இந்திய பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சிங்கராசு முன்னிலையிலும் நடைப்பெற்றது.

இம்மாநாட்டில் கேரளா,தெலுங்கானா உள்பட சுமார் 20மாநிலங்களில் சேவை அறியும் உரிமைச் சட்டம் அமுலாகி பொது மக்களுக்கு பல வழிகளில் பயன்படுவதை போல நம் தமிழகத்திலும் பொதுமக்கள் நலன் கருதி இச்சட்டத்தை உடனே அமுல்படுத்த வேண்டும் எனவும்,இதன் மூலம் பிறப்புசான்று,இறப்பு சான்று,வருமான வரி சான்று,பட்டா,சிட்டா,அடங்கல் இவை தவிர அரசின் இதர சேவைகள் உரிய நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் கிடைக்கும்.உரிய காலத்திற்குள் சேவைகளை வழங்காத அதிகாரிகள் மீது சேவை அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொது மக்கள் வழக்கு தொடர்ந்து நஷ்ட ஈடு பெறலாம் எனவும்,கிளைகோமெட் என்ற பூச்சிக்கொல்லி மருந்து புற்றுநோய் போன்ற பல நோய்களை உருவாக்குவதாக வெளிநாடுகளிலும் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவிலும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.நம் தமிழகத்திலும் மேற்படி பூச்சிக்கொல்லி மருந்தின் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும்,கோவை, திருச்சி,விமான நிலையங்களைப் போல மதுரை விமான நிலையத்தையும் சர்வதேச அந்தஸ்து பெற்ற விமான நிலையமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் எனவும், பொள்ளாச்சி சம்பவத்தை தொடர்ந்து மாணவர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் ஆயிரக்கணக்கான ஆபாச இணைய தளங்களை மத்திய அரசு உடனே தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இம்மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக நகைச்சுவை நடிகர் வையாபுரி கலந்து கொண்டாா்.இதில் தென் இந்திய மாநில அமைப்பாளர் வீரபத்திரன்,மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் அரசின் கூடுதல் செயலாளர் முருகேசன்,ஓய்வு பெற்ற மதுரை மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்ற நீதிபதி கனகசபாபதி, தமிழ்நாடு அரசின் உணவு பாதுகாப்புதுறை நியமன அலுவலர் மருத்துவர் சோமசுந்தரம்,மாநில புரவலர் வரிச்சியூர் செல்வம் மற்றும் தென் இந்திய மாநில,மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.