அரக்கோணம் பாராளுமன்ற திமுக கூட்டணி வேட்பாளர் ஜெகத்ரட்சகன் அறிமுக ஆலோசனை கூட்டம்..

அரக்கோணம் பாராளுமன்ற திமுக கூட்டணி வேட்பாளர் ஜெகத்ரட்சகன் அறிமுக ஆலோசனை கூட்டம் காட்பாடியில் நடந்தது.

வேலூர் மத்திய மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார் காட்பாடி பகுதி செயலாளர் ஜி.வன்னியராஜர வரவேற்றார். அரக்கோணம் பாராளுமன்ற திமுக கூட்டணி வேட்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகனை அறிமுகப்படுத்தி சிறப்புரையாற்றினார்.

திமுக பொருளாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ. வேலூர் மாவட்ட செயலாளர்கள் ஆர்.காந்தி எம்.எல்.ஏ. ப, கார்த்திகேயன் எம்.எல்.ஏ. அவைத் தலைவர் தி.அ. முகமது சகி, ஒன்றிய செயலாளர் சரவணன் சோளிங்கர் கருணாகரன் காங்கிரஸ் டீக்காராமன், ஜார்ஜ், மதிமுக உதயகுமார் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற மாவட்ட செயலாளர் சரவணன, ஜெகதீசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

கே.எம்.வாரியார்:- வேலூர்