கழுகுமலையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல்…

கழுகுமலையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சீல் வைத்து, உரிமத்தை ரத்து செய்தனர்.

தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மருத்துவர் தங்க விக்னேஷ் உத்தரவுப்படி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நாக சுப்பிரமணியன், ராஜா, முருகேசன் ஆகியோர் கொண்ட குழுவினர் கழுகுமலையில் உள்ள கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் கீழ பஜாரில் உள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை, மறு சுழற்சி செய்ய முடியாத நெகிழி பைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஏற்கனவே, கடந்த 15-ம் தேதி போலீஸார் நடத்திய சோதனையில் இதே கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. அதற்கு அடுத்த 4 நாட்களுக்குள் மீண்டும் அதே கடையில் புகையிலை விற்பனை செய்ததால், அந்த கடையை மூடி சீல் வைத்தனர். மேலும், அந்த கடையின் உரிமத்தை அதிகாரிகள் ரத்து செய்தனர்.

செய்தியாளர்:- அஹமது