கோவில்பட்டியில் மாசு இல்லா தமிழ்நாடு விழிப்புணர்வு கண்காட்சி…

கோவில்பட்டி நகராட்சி மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் நெகிழி மாசு இல்லா தமிழ்நாடு 2019 விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது.

தூத்துக்குடி மாவட்ட நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலம் நெகிழி மாற்றுப் பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி பெற்ற மகளிர்சுய உதவி குழுக்கள் தயார் செய்த சணல் பைகள், காகித பைகள், பனை ஓலை பெட்டிகள் கண்காட்சி நடந்தது.

நகராட்சி ஆணையாளர் க.அச்சையா தலைமை வகித்து கண்காட்சியை தொடங்கி வைத்தார். ரோட்டரி சங்கத் தலைவர் பாபு, நகராட்சி சுகாதார அலுவலர் ஸ்டேன்லிகுமார் முன்னிலை வகித்தனர். நகராட்சி சுகாதார ஆய்வாளர் சுரேஷ் வரவேற்றார்.

இந்த கண்காட்சியை கோவில்பட்டி நகரை சேர்ந்த மகளிர் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் மற்றும் நாடார் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர். சுகாதார ஆய்வாளர் முருகன் நன்றி கூறினார்.

செய்தியாளர்:- அஹமது