மர்மமான முறையில் வாலிபர் கொலை வழக்கில் மனைவி மனைவியின் கள்ள காதலன் கைது

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்செங்கம் அருகே கடந்த 19ஆம் தேதி கருமாங்குளம் ஏரிக்கரை அருகே அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் வாலிபரின் சடலம் இருப்பதாக மேல்செங்கம் காவல்துறையினருக்கு அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதனைத் தொடர்ந்து செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் சின்னராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் குற்றவாளியை கண்டுபிடிக்க தீவிர விசாரணை மேற்கொண்டனர் அப்போது விசாரணையில் மனைவியின் கள்ளக்காதலன் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக கள்ளக் காதலனையும் அதற்கு தூண்டுதலாக இருந்த மனைவியையும் போலீசார் கைது செய்தனர்.செங்கம் அடுத்த மேல்செங்கம் பகுதியில் உள்ள துரிஞ்சாபுரம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மேல்செங்கம் பகுதியைச் சேர்ந்த பிரேமா என்பவரை காதலித்து இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர் இதற்கிடையில் அவர்களுக்கு சுமார் 4 வயதில் பெண் குழந்தை இருந்துவரும் நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக இருவரும் குடும்ப பிரச்சனை காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர் இந்நிலையில் பிரேமா செங்கத்தில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை செய்து வந்துள்ளார் அப்போது பரமனந்தல் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் செல்போன் கடை பக்கத்திலுள்ள பேக்கரிக்கு டீ குடிக்க அடிக்கடி வந்து போவது வழக்கமாக இருந்து வந்துள்ளது அப்போது செல்போன் கடையில் வேலை செய்து வந்த பிரேமாவும் ஆறுமுகமும் ஒருத்தருக்கொருத்தர் பழகி வந்துள்ளனர் இந்நிலையில் பிரேமா தனது கணவர் செய்த கொடுமைகளையும் அவர் அடிக்கடி அடித்து துன்புறுத்துவதையும் ஆறுமுகத்திடம் சொல்லி ஆறுதலை தேடி உள்ளார் இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஆறுமுகம் பிரேமா விற்கு உதவி செய்வதுபோல் அவரது கணவரிடம் அவருடைய நிலைமை பற்றி எடுத்துக் கூறியுள்ளார் இந்த நிலையில் பிரேமாவின் கணவர் விஜயகுமார் ஆறுமுகம் நண்பராக பழகி வந்துள்ளனர் இந்த பழக்கமானது பிரம்மாவிற்கும் ஆறுமுகத்திற்கு திருமணத்தை மீறிய தகாத உறவு ஏற்பட்டுள்ளது இந்நிலையில் பிரேமாவும் ஆறுமுகமும் தவறான முறையில் பழகுவது பிரேமாவின் கணவரான விஜயகுமாருக்கு கண்டும் காணாமல் தெரியவந்துள்ளது அப்போது விஜயகுமார் பிரேமாவை அடித்து துன்புறுத்தியதாக பிரேமா ஆறுமுகத்திடம் கூறியதாக சொல்லப்படுகிறது இதனால் பிரேமாவிடம் உனது கணவர் விஜயகுமாரை தனியாக அழைத்து இனி உன்னை அடிக்காத வகையில் நான் பேசி விடுகிறேன் என கூறிய ஆறுமுகம் மேல்செங்கம் அடுத்த கருமாங்குளம் ஏரிக்கரை அருகே அவரை வரவழைத்து இருவரும் மது அருந்தி உள்ளார்கள் அப்போது பிரேமாவை எதற்கு அடிக்கிறாய் என்று ஆறுமுகம் கேட்டதாக சொல்லப்படுகிறது அப்போது எனது மனைவியை நான் அடிப்பேன் அதைக் கேட்க நீ யாருடா அவளுடன் நீ தொடர்பு வைத்துக்கொண்டு உள்ளாயா என்று விஜயகுமார் கேட்டுள்ளார் அப்போது இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ஆறுமுகம் விஜயகுமாரை கடுமையாகத் தாக்கி கழுத்தை நெருக்கி தென்னை மட்டையால் அடித்து கொலை செய்துள்ளதா போலீசார் விசாரணையில் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது இந்த நிலையில் பிரேமாவின் தூண்டுதலின் பேரில் விஜயகுமார் ஆறுமுகம் அடித்து கொலை செய்யப்பட்டதாக கூறி பிரேமாவையும் ஆறு முகத்தையும் கைது செய்த மேல்செங்கம் காவல்துறையினர் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர் திருமணத்திற்கு மீறிய தகாத உறவினால் தனது கணவனையே கள்ளக்காதலனை வைத்து அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் செங்கம் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது