மதுரையில் காந்தி சிலைக்கு அமைச்சர், ஆட்சியர் மாலையணிவித்து மரியாதை

மதுரையில் காந்தியடிகள் அரையாடைக்கு மாறிய நினைவு நாளான இன்று காந்தி சிலைக்கு அமைச்சர் மூர்த்தி, ஆட்சியர் அனீஷ் சேகர், ஆகியோர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.மதுரை ஒரு நூற்றாண்டுக்கு முன்னதாக, மகாத்மா காந்தியடிகள், கோட், சூட்டிலிருந்து அரையாடைக்கு மாறினார். அந்த நிகழ்வு நடந்து நூறாண்டுகள், நிறைவடைந்த நாளான இன்று(22.9.2021) மகாத்மா காந்தியடிகளின் ஆடைப்புரட்சி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு காமராஜர் சாலை அருகில் உள்ள காந்தி பொட்டலில் உள்ள காந்தியடிகளின் திருஉருவச் சிலைக்கு மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள், மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் ஏராளமான பள்ளிக் குழந்தைகள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..