திருவண்ணாமலை கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.சட்டசபை தேர்தலில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வெற்றி பெற்று முதல்வராக வேண்டும் என்று தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய ஆலயங்களில் சென்று வேண்டுதல் வைத்திருந்தார் துர்கா ஸ்டாலின். திருவண்ணாமலையில் கிரிவலம் வந்து வேண்டிக்கொண்டார். திருச்செந்தூர் முதல் திருவள்ளூர் வரையிலும் உள்ள ஆலயங்களில் இறைவனிடம் வேண்டுதல் வைத்திருக்கிறார் துர்கா.தன்னுடைய கணவர் வெற்றி பெற்று முதல்வராக வேண்டும் என்ற நேர்த்திக்கடன் நிறைவேறியதால் மகிழ்ச்சியடைந்திருக்கும் துர்கா ஸ்டாலின் தற்போது கொரோனா தளர்வுகள் அமலில் உள்ள போதே கோவில்களுக்கு சென்று வேண்டுதலை நிறைவேற்றி இறைவனுக்கு நன்றி செலுத்தி வருகிறார்.இந்நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் மகள் செந்தாமரை சபரீசன் உள்ளிட்டோர் சாமி தரிசனம் செய்தனர். துர்கா ஸ்டாலினுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.