கலசபாக்கம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த வீரளூர் அருகே வடகரைநம்மியந்தல் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய முனைவர் தொல் திருமாவளவன் MP 59 வது பிறந்தநாளை முன்னிட்டு வடகரைநம்மியந்தல் கிராமத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் பு. செல்வம் ஆலோசனைப்படி ஒன்றிய செயலாளர் சொ.ராஜா வழிகாட்டுதலின் பேரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜெயமூர்த்தி மற்றும் முகாம் செயலாளர் சு. சத்தியகுமார், ஆகியோர் வரவேற்ப்புரை நிகழ்த்தினார் ஒன்றிய அமைப்பாளர் சௌவுந்தரபாண்டியன், ஒன்றிய பொருளாளர் ந. செல்வம் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக முற்போக்கு மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர் தீ. பாண்டியன் மற்றும் விவசாய பாசறை மாவட்ட துணை அமைப்பாளர் செங்குட்டுவன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி வடகரை நம்மியந்தல் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார் பின்னர் இந்நிகழ்ச்சியில் முகாம் பொருளாளர் ஏகாம்பரம் நன்றியுரை ஆற்றினார் மேலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி தலைவர் திருமாவளவன் வாழ்க வாழ்க என்ற வீர முழக்கமிட்டனார்