அம்பேத்கார் நகர் குடியிருப்பு பகுதியில் கொடிய விசம் கொண்ட கண்னாடி விரியன் பாம்பு பொதுமக்கள் அச்சம்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தென்றல் நகர் செல்லும் சாலையில் அம்பேத்கர் நகர் உள்ளது இந்த பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன குடியிருப்பு பகுதிகளில் 2 கொடிய விஷம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு கொசு வலையில் மாட்டிக் கொண்டதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் இராஜபாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர் தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய அதிகாரி ஜெயராமன் தலைமையில் வந்த தீயணைப்புத் துறையினர் இரண்டு கண்ணாடி விரியன் பாம்புகளை பிடித்து பணத்துடன் வனத்துறையினர் ஒப்படைத்தனர் வனத்துறையினர் அய்யனார் கோவில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அடர்ந்த வனப்பகுதியில் இரண்டு பாம்புகளை விட்டுள்ளனர் குடியிருப்பு பகுதிகளில் பெரிய அளவிலான பாம்புகள் சுற்றி திரிலந்ததால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர் பஞ்சாயத்து நிர்வாகம் அருகே உள்ள முட்புதர்கள் மற்றும் குப்பைகளை அகற்றி பாதுகாப்பு அளிக்க வேண்டும் என பஞ்சாயத்து நிர்வாகத்துக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம்