தென்காசி மாவட்டத்தில் ஒண்டிவீரன் 250 வது நினைவு தினம்;மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை.

விடுதலை போராட்ட வீரர் மாவீரன் ஒண்டிவீரன் நினைவிடத்தில தென்காசி மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், நெல்கட்டும் செவல் பச்சேரி பகுதியில் 20.08.21 வெள்ளிக் கிழமை விடுதலைப் போராட்ட வீரர் மாவீரன் ஒண்டிவீரன் நினைவிடத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ் மாலை அணிவித்து மரியாதைசெலுத்தினார். விடுதலைப் போராட்ட தியாகிகள் மற்றும் தலைவர்களை நினைவு கூறும் விதமாக தமிழக அரசின் சார்பில் அவர்களது பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களில் மாலை அணிவித்துமரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தென்காசி மாவட்டத்திலுள்ள விடுதலைப் போராட்ட வீரர் மாவீரன் ஒண்டிவீரன் 250 வது நினைவு நாளில், அவரது புகழை கொண்டாடும் விதமாக அவரது நினைவிடத்தில் தமிழக அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் பொதுமக்கள் அதிகமாக கூடாத வகையில் தமிழக அரசு விதித்துள்ள விதிமுறைகளின் படி மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் கோட்டாட்சியர் ஹஸ்ரத் பேகம், வாசுதேவநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரா, சிவகிரி வட்டாட்சியர் ஆனந்த், உட்பட அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்