அரிசி ஆலையில் பதுக்கி வைக்கிப்பட்டிருந்த 32 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்,

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி மூட்டை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.திருமங்கலத்தில் உள்ள அரிசி ஆலை ஒன்றில், 32 ரேஷன் அரிசி மூட்டைகள், பதுக்கி வைக்கப்பட்டிருபதாக, திருமங்கலம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.அதன்பேரில், திருமங்கலம் உப கோட்ட போலீஸார் தனியார் ஆலையில் சோதணை நடத்தியதில், சுமார் 1550 கிலோ எடையுள்ள 32 ரேஷன் அரிசி மூட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்து, தனியார் ஆலையின் உரிமையாளர் ஜெயபாண்டியன் மகன் செந்தில்குமார் 41. விசாரித்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்