
மதுரை மாவட்டம் மேலூர் ஒன்றியத்துக்குட்பட்ட பூஞ்சுத்தி ஊராட்சியில் மாவட்ட வளர்ச்சி நிதி திட்டத்தின் கீழ் ரூபாய் 9 லட்சம் மதிப்பீட்டில் 5000 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ தமிழரசன், மேலூர் யூனியன் சேர்மன் பொன்னுச்சாமி ஆகியோர் திறந்து வைத்தனர்.இந்நிகழ்ச்சியில் பூஞ்சுத்தி ஊராட்சி மன்ற தலைவர் ராமநாதன், திருவாதவூர் ஊராட்சி மன்ற தலைவர் இளவரசன், வார்டு உறுப்பினர் ஜெயகுமார், மேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமமூர்த்தி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க தயாநிதி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற ராஜதுரை, திருவாதவூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அசர்பானு சிக்கந்தர், கிடாரிப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ், வெள்ளலூர் கூட்டுறவு சங்கத் தலைவர் இளங்கண்ணன், மேலூர் தெற்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் உதயகுமார், மேலூர் தெற்கு ஒன்றிய அம்மா பேரவை இணை செயலாளர் உதயசங்கர், முன்னாள் கவுன்சிலர்கள் அரிசி கண்ணன், ஷாஜகான், காதர்மைதீன், மேலூர் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சிவா, மாணவரணி துணை தலைவர் அன்பரசன், அண்ணா தொழிற்சங்க துணை தலைவர் அன்னக்கொடி, மேலூர் அருள்பாண்டி, மாவட்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தண்ணாயிரம் கிராம பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.