
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் ஆதிசிவாச்சாரியர்களுக்கு ஏற்பட்டிருக்கும் இன்னல்களை போக்கவும், வாழ்வாதாரம் பாதித்துள்ள சிவாசாரியார்கள் நினைத்த காரியம் கைகூடவும் கற்பக விநாயகரிடம் அதர்மசீரிச மந்திர பாராயணம் பாடி 80க்கும் மேற்பட்ட சிவாசாரியர்கள் பிராத்தனையில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிச்சை குருக்கள் பரம்பரை பரம்பரையாக பல நூற்றாண்டு காலமாக சிவாச்சாரியார்கள் சிவாலயங்களில் பூஜைகள் செய்து வருகின்றனர். தற்போது அவர்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதை அனைவரும் அறிவார்கள். இதில் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்துவது மனவேதனையை தருகிறது. சிவாச்சாரியார்களுக்கு பல்வேறு சமூகத்தினரும் ஆதரவு தந்து கொண்டுள்ளனர் அதனை அறியாமல் சிலர் ஈடுபட்டு கொண்டிருப்பது மனவருத்தத்தை அளிக்கின்றது என்றவர், இறுதியில் அனைத்தும் நன்மையில் முடியும் என பிச்சை குருக்கள் தெரிவித்தார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.