செங்கத்தில் பாரத சாரணர் இயக்க பொறுப்பாளருக்கு  பாராட்டு விழா.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி  ஆசிரியருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.பாராட்டு விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் திருமால் தலைமை தாங்கினார் உதவித் தலைமையாசிரியர்  நளினா லட்சுமி முன்னிலை வகித்தார்.பள்ளியில் இசை  ஆசிரியராகவும் ,செங்கம் கல்வி மாவட்டத்தில் பாரத சாரண இயக்கத்தில் மாவட்ட பயிற்சி ஆணையாளராகவும் கோமதி பணியாற்றி வருகிறார். பாரத சாரண இயக்கத்தில் பல்வேறு சமூகப் பணி 19 ஆண்டுகால சேவையைப் பாராட்டி தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  பாராட்டி  விருதுகளை வழங்கினார் இதனை பாராட்டும் விதமாக மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் ஆசிரியை கோமதியை பாராட்டி வருகின்றனர். இதுகுறித்து கூறுகையில் பாரத சாரண இயக்கத்தில் பல்வேறு சமூகப் பணி சேவைகளை பாராட்டி தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களிடம் விருது பெற்றது பெருமையாக உள்ளது மேலும் , சாரணர் இயக்கத்தின் மூலம் சேவையாற்றுவேன் என்று கூறினார்.