செங்கம் அருகே ஊராட்சிக்கு சொந்தமான இடத்தை தனி நபரால் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியல்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கட்டமடுவு ஊராட்சியில் தனிநபர் ஒருவர் ஊராட்சிக்கு சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கொண்டு அகற்ற மறுப்பதால் அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் அப்பகுதி மக்கள் சிங்காரப்பேட்டை செங்கம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது செங்கம் அடுத்த கட்டமடுவு பஞ்சாயத்திற்கு உட்பட்ட சுமார் ஒரு ஏக்கர் ஊராட்சிக்கு சொந்தமான இடத்தை 10 வருடகாலமாக அதே பகுதியைச் சேர்ந்த சில தனிநபர் ஆக்கிரமித்து உள்ளதாகவும் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி இதுகுறித்து ஊர் பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், ஊராட்சி ஒன்றிய அலுவலம், காவல் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பல முறைபுகார் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள படாமல் இருந்து வந்துள்ளது இதனடிப்படையில் ஊராட்சி பொது நிதியிலிருந்து ஆதிதிராவிடர் பகுதியில் புதியதாக கழிவறை கட்டிடம் கட்ட அரசு அனுமதி அளித்துள்ளது இதனால் ஊராட்சிக்கு சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் இடத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் அப்பகுதி மக்களுக்கு அரசு வழங்கக்கூடிய இலவச கழிப்பறை கட்டிடம் கட்டுவதற்கு ஆக்கிரமிப்பு செய்துள்ள நபர்கள் அதற்கான வேலையை தடுத்து வருவதாகவும் அதனை கண்டித்து சுமார் 50க்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் அவ்வழியாகச் சென்ற அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேல்செங்கம் காவல்துறையினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இரண்டு நாட்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக உறுதி அளித்ததின் பேரில் அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர் தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் சுமார் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது