
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் 10 ஆண்டுகளாக தமிழ் சார்ந்த பணிகளை செய்து கொண்டிருக்கும் வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கம் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு முப்பெரும் விழாவை நடத்தியது. இந்திய சுதந்திரம் 75 , மாணவர்களுக்கான பல்திறன் போட்டிக்கான பரிசளிப்பு, உறுப்பினர்களுக்கான பாராட்டுச் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை வழங்குதல் உள்ளிட்ட முப்பெரும் விழா தனியார் அரங்கில் நடந்தேறியது. இந்த நிகழ்விற்கு வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா தலைமை வகித்தார். செயலாளர் பா. சீனிவாசன் வரவேற்றார். மேனாள் மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் டாக்டர் எஸ். குமார், திமுக மாவட்ட அவைத் தலைவர் கே.ஆர். சீதாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளர்களாக. வடக்கு மாவட்ட திமுக செயலாளர் எம்.எஸ். தரணிவேந்தன், அரிமா சங்க மாவட்ட மேனாள் ஆளுநர் வி.எஸ். தளபதி உள்ளிட்டோர் பங்கேற்று, சுதந்திர இந்தியாவின் தற்போதைய நிலைகளை பட்டியலிட்டும், விவரித்தும் பேசினார்கள். மேலும் மருத்துவர் ஜி.எஸ். கோகுல கிருஷ்ணன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்த நிகழ்வில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. தமிழ்ச் சங்க பொறுப்பாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை வழங்கப்பட்டது. சமூக ஆர்வலர்கள் பலரும் பங்கேற்றனர். இறுதியில் சங்க பொருளாளர் எ. தேவா நன்றி கூறினார்.
You must be logged in to post a comment.