செங்கம் அடுத்த மேல்பெண்ணாத்தூர் பள்ளியில் சுதந்திர தின விழாவில் முன் களப் பணியாளர்களுக்கு கௌரவிப்பு.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 75வது சுதந்திர தின விழா ஊராட்சி மன்ற தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்றது. பள்ளியின் பொறுப்பு தமிழாசிரியர் வேல்முருகன் அனைவரையும் வரவேற்று பேசினார் ஒன்றிய கவுன்சிலர் முருகன், விநாயகம், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கண்ணுப்பிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் விஜய் சிறப்புரையில் பேசியதாவது நம் முதல்வர் சிறந்த திட்டங்கள் செயல்படுத்தி வருகிறார். பள்ளிக்கல்வித் துறைக்கு தனி கவனம் செலுத்தி வருகிறார் மேலும் மேல் பெண்ணாத்தூர் பகுதி சுற்றுப்புற கிராமத்தில் உள்ள பொதுமக்கள் கரோனா தடுப்பூசி விழிப்புணர்வு இல்லாத நிலையில் உள்ளது மூன்றாவது அலை தாக்கம் வருவதற்கு முன் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் நம்மைச் சார்ந்தவர்களையும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று பேசினார் இவ்விழாவில் முன்கள பணியாளர்களாக செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு செய்து பாராட்டி கௌரவித்தனர்.இந்நிகழ்வில் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் விசாலாட்சி வெங்கடேசன் திமுக முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் ஆர் கே செல்வம் ஊராட்சி செயலாளர் ஏழுமலை மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆசிரியர்கள் சங்கீதா, தனலட்சுமி, நாராயணன், அரசு , மகேஸ்வரி, ராஜா , ஆறுமுகம் , ராஜாராம், மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர் இந்நிகழ்வானது சமூக இடைவெளியுடன் நடைபெற்றது

உதவிக்கரம் நீட்டுங்கள்..