
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் மனோகரன் தலைமையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து கொண்டாடப்பட்டது அரசு அலுவலர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டனர். செங்கம் காவல்துறை சார்பில் செங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் கோமதி தலைமையில் காவல் துணை கண்காணிப்பாளர் சரவணகுமரன் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் செங்கம் காவல் நிலையத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் சரவணகுமரன் தலைமையில் காவல் உதவி ஆய்வாளர்கள் இயேசுதாஸ் யுவராஜ் மற்றும் சர்க்கிள் ரைட்டர் மோகன் உள்ளிட்ட காவலர்கள் தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தினர் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்கள் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தப்பட்டது
You must be logged in to post a comment.