தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் சுதந்திர தின விழா; பணியாளர்களுக்கு கண்காணிப்பாளர் ஜெஸ்லின் பாராட்டு..

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு. இரா. ஜெஸ்லின் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். மேலும் கொரோனா காலத்தில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய மருத்துவமனை பணியாளர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கி கெளரவித்தார். இந்த நிகழ்ச்சியில் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு ஊழியர்கள், ஒப்பந்த பணியாளர்கள், பேரிடர் காலத்தில் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட பணியாளர்கள், செவிலியர்கள், ஆய்வக நுட்பனர்கள், கணினி பணியாளர்கள், 108 அவசர ஊர்தி பணியாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் தொடர்ந்து அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு. இரா. ஜெஸ்லின் சிறப்புரையாற்றினார். அதில் அவர் கூறிதாவது: கடந்த ஒரு வருட கொரோனா காலங்களில் பணிபுரிந்த மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு ஊழியர்கள், ஒப்பந்த பணியாளர்கள், பேரிடர் காலத்தில் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த பணியாளர்கள், அரசு பொதுப் பணித் துறை, மின்சார பராமரிப்பு மற்றும் கட்டிட பராமரிப்பு துறை பொறியாளர்கள், அமர் சேவா சங்கத்தின் மூலம் தளிர் கிளினிக்கில் பணியமர்த்தப்பட்ட பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் பாராட்டி பேசினார். மேலும் அவர் கூறுகையில், எல்லோருடைய பங்களிப்பும் கொரோனா பேரிடர் காலத்தில் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக இருந்தது.

கொரோனா காலங்களில் நமது தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சோகோ நிறுவனத்தின் உதவியால் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாத நிலைமை இருந்தது என்றும், கடந்த ஒரு வருட காலமாக அனைவரும் கொரோனா நோயால் மிகவும் சிரமத்துக்கு ஆளானார்கள் என்றும், அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் நமது தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் ஒவ்வொருவரும் ஓய்வின்றி கடும் போராட்டத்திற்கு மத்தியில் மிகுந்த அர்ப்பணிப்போடு செயல்பட்டார்கள். அதற்காக மருத்துவர் முதல் கடை நிலை ஊழியர் வரை தென்காசி மருத்துவமனையில் பணிபுரியும் அனைவரையும் கண்காணிப்பாளர் ஜெஸ்லின் பாராட்டினார்.மேலும், பணியாளர்களுக்கு பக்கபலமாகவும் முழு ஆதரவும் கொடுத்த, பணியாளர்களின் குடும்பத்தினரையும், அவர்களின் தியாகத்தையும் நினைவு கூர்ந்த ஜெஸ்லின், மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும், பாராட்டு சான்றிதழ் வழங்கி அனைவரையும் கௌரவித்தார். மருத்துவமனையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மருத்துவர்கள் மது, முத்துக்குமாரசாமி, ராஜலட்சுமி, மணிமாலா, சுரேஷ் மில்லர், நிர்மல், மகேஷ், முத்துராமன், தமிழருவி, சேதுபதி, மணிகண்டன், மகிதா ஸ்ரீ ,உமா மகேஸ்வரி, பார்த்தசாரதி, சிவ நந்தினி, செவிலிய கண்காணிப்பாளர்கள் முத்துலட்சுமி, வசந்தி,செவிலியர்கள் வினைதீர்த்தாள்,ரவிச்சந்திரன்,மாலையம்மாள், ஸ்ரீகலா, சுப்புலட்சுமி, அறச்செல்வி, சீதா, மேகலா, சுமதி, சண்முக லட்சுமி ஆய்வக நுட்புனர்கள் ஹக்,ராஜா உங்களின் வீச்சாளர்கள் முருகன், பொதுப்பணித்துறை கட்டிட பொறியாளர் இப்ராஹிம், மின்சார பராமரிப்புத் துறை பொறியாளர் உதய குமார், உதவியாளர் பாலகிருஷ்ணன், 108 அவசர ஊர்தி மேலாளர் இசக்கிமுத்து, அனைத்து பணியாளர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்